கருவளையத்தை முற்றிலுமாக மறைய வைக்க வேண்டுமா? பாசிப்பயிறை ஊற வைத்து இப்படி பயன்படுத்துங்க!!
ஒரு சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையங்கள் இருக்கும். இவை நீண்ட நேரம் செல்போன், டிவி, கம்பியூட்டர் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தியதற்கான வெகுமதி ஆகும். இந்த கருவளையங்களை மறையச் செய்ய ஆங்கில மருத்துவத்தில் பல வகையான மருந்துகள் இருக்கின்றது. இந்த மருந்துகள் நம்முடைய கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை முற்றிலுமாக நீக்கும். இருப்பினும் சில நாட்கள் கழிந்து மீண்டும் கருவளையம் ஏற்படும். நாம் மீண்டும் ஆங்கில மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டியிருக்கும். இது அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் முற்றிலுமாக கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை இயற்கையான மருந்து ஒன்றை பயன்படுத்தி எவ்வாறு மறையச் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பாசிப்பயிறு
* கசகசா
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றில் சிறிதளவு பாசிப்பயிறு மற்றும் சிறிதளவு கசகசா சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் ஊற்றி இதை ஊற. வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து ஊறவைத்த பாசிப்பயிறு பற்றும் கசகசாவை எடுத்து ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரைத்த இந்த கலவையை கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண்களுக்கு கீழ் இருக்கும் கயுவளையம் மறையத் தொடங்கும்.