உங்களுடைய முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்போ திராட்சை பேஷியல் பண்ணுங்க!
நம்முடைய முகத்தை எந்தவித அழுக்கும் இன்றி சோர்வும் இன்றி ஜொலிக்க வைக்க திராட்சை பழத்தை வைத்து பேரியல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திராட்சையில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. இதை சாதாரணமாக சாப்பிட்டு வந்தாலே சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். திராட்சை பழத்தில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளது. இந்த ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நம்முடைய சருமத்தை புத்துயிர் பெறச் செய்கின்றது.
திராட்சை பழத்தில் நம்முடைய சருமத்திற்கு தேவையான விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் கே ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. திராட்சை பழம் கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. இந்த திராட்சை பழத்தை இரண்டு விதமாக நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தலாம். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.
வழிமுறை 1..
தேவையான பொருட்கள்…
* திராட்சை பழம்
* தயிர்
* எலுமிச்சை சாறு
செய்முறை…
முதலில் திராட்சை பழத்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த திராட்சை பழத்துடன் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்.
வழிமுறை 2…
தேவையான பொருட்கள்…
* திராட்சை பழம்
* தேன்
செய்முறை…
வழிமுறை ஒன்றைப் போலவே திராட்சை பழங்களை மிக்சி ஜாகிர் சேர்த்து அரைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் அரைத்த இந்த திராட்சையுடன் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளை வேண்டும்.
பின்னர் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளை வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து முகத்தை கழுவி விடலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகம் ஜொலிக்கத் தொடங்கும்.