Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சருமத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா!! அப்போ இந்த ஜூஸ் வகைகளை குடிங்க!!!

Want to make your skin glow!! So drink these types of juices!!!

images 7

சருமத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா!! அப்போ இந்த ஜூஸ் வகைகளை குடிங்க!!!

நமது சருமத்திற்கு பொலிவு தரக்கூடிய சில ஜூஸ் வகைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஜூஸ் வகைகளை குடித்து வந்தால் சருமம் பொலிவு பெற்று பளபளக்கும்.

நாம் அனைவரும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பாக நாம் அனைவரும் நம்முடைய சருமத்தின் நலனுக்காக அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

சருமம் கருப்பாக மாறாமல் இருக்க, சருமம் பொலிவு பெற, சுருக்கம் விழாமல் இருக்க, பருக்கள் வராமல் இருக்க, கரும்புள்ளிகள் மறைய, கருவளையங்கள் மறைய என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மருந்துகளை எடுத்து வருகிறோம்.இதனால் நன்மைகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.ஆனால் இதை பயன்படுத்த தொடங்கினால் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

சருமத்தை பராமரிக்க நமக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவை. ஆனால் அதை நாம் எடுத்துக் கொள்ளாமல் அதற்கு பதிலாக ஒவ்வொரு மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்து வருகிறோம்.எனவே பொலிவான சருமம் பெறுவதற்கு இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் ஜூஸ் வகைகளை குடித்து வாருங்கள்.

சருமத்தை பொலிவாக்க குடிக்க வேண்டிய ஜூஸ் வகைகள்:

* சருமம் பொலிவாக மாறுவதற்கு கேரட் ஜூஸ் குடிக்கலாம்.கேரட்டில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்து உள்ளது.

* சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கலாம். வெள்ளரிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

* சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.பீட்ரூட் ஜூஸில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

* சருமத்தை பொலிவாக மாற்ற நாம் தக்காளி ஜூஸ் குடிக்கலாம்.தக்காளி நமது சருமத்தில் உள்ள கருமையை போக்கும்.

* கீரை வகைகளில் ஒரு கீரையை ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.கீரையில் வைட்டமின் கே சத்து உள்ளது.

* சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு மாதுளை ஜூஸ் குடித்து வரலாம்.மாதுளை நமது ரத்தத்தை சுத்திகரிக்கும்.

* மேலும் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கும் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.

* ஆப்பிள் ஜூஸ் மட்டுமில்லாமல் சருமத்திற்கு உகந்த கற்றாழை ஜூஸையும் சருமம் பொலிவு பெறுவதற்கு குடிக்கலாம்.

 

Exit mobile version