Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்!

#image_title

அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்!

நம்முடைய வீட்டில் கருத்து இருக்கும் பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்களை பளிச்சென்று மாற்றுவதற்கு இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

நம்முடைய வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தாமல் விட்டிருந்தால் அது கருத்து விடும். மேலும் அழுக்கு படிந்து பச்சை நிறமாகவும் மாறி இருக்கும். அதே போல பூஜை சாமான்கள் அனைத்தும் எண்ணெய் அழுக்கு படிந்து கருப்பு கருப்பாக மாறி இருக்கும். இந்த பாத்திரங்கள் அனைத்தையும் பளிச்சென்று சுத்தமாக மாற்றுவதற்கு என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்…

* கோதுமை மாவு
* எலுமிச்சை சாறு

செய்முறை…

பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்றுவதற்கு தேவையான கலவையை தயார் செய்யும் முறை மிகவும் எளிதானது. அதற்கு ஒரு சிறிய பவுல் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நான்கு ஸ்பூன் அளவு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மூன்று எலுமிச்சம் பழங்களின் சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் இதை ஸ்கிரப் பயன்படுத்தி தொட்டு கருப்பாக இருக்கும் பித்தளை பாத்திரங்கள் மீது தேய்த்து கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவி காட்டன் துணி கொண்டு துடைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது பாத்திரங்கள் மீது விரைவில் கரும்புள்ளிகள் தோன்றாது.

Exit mobile version