Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடி உதிர்தல் தடுக்க வேண்டுமா! கொத்துமல்லி தழை ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க!!

#image_title

முடி உதிர்தல் தடுக்க வேண்டுமா! கொத்துமல்லி தழை ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க!!

நமக்கு ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனையை தடுத்து தலைமுடியை பலப்படுத்த நாம் கொத்தமல்லித் தழை ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். இந்த கொத்தமல்லித் தழை ஹேர் மாஸ்க் எவ்வாறு செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கொத்துமல்லித் தழை ஹேர் மாஸ்க்கை நாம் தலைமுடிக்கு பயன்படுத்தும் பொழுது தலை முடியின் வேர் கால்கள் வலிமை பெறுகின்றது. மேலும் தலையில் அள்ள இறந்த செல்களை நீக்க பயன்படுகின்றது. மேலும் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமடைகின்றது. இந்த கொத்தமல்லித் தழை ஹேர் மாஸ்க் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். இந்த கொத்தமல்லித் தழை ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு வெறும் மூன்று பொருட்கள் போதும்.

கொத்தமல்லித் தழை ஹேர் மாஸ்க் தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* கொத்தமல்லித் தழை
* வெந்தயம்
* சீயக்காய்

கொத்துமல்லித் தழை ஹேர் மாஸ்க் தயார் செய்யும் முறை…

முதலில் பசுமையான கொத்தமல்லித் தழைகளை எடுத்து நீரினால் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெந்தயம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதோ தலைமுடியின் வேர்கால்களை வலிமைப்படுத்தக் கூடிய மருந்து தயார்.

இந்த கொத்தமல்லி வெந்தய கலவையை எடுத்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரை பயன்படுத்தி சீயக்காய் பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதால் தலைமுடி உதிர்வது 100 சதவீதம் குறையும். மேலும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

Exit mobile version