Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரப்பான் பூச்சியின் தொல்லைக்கு முடிவுகட்ட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

cockroaches-home-remedies

cockroaches-home-remedies

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொந்தரவு அதிகமாக இருந்தால் அதை இயற்கையான பொருட்களை கொண்டு விரட்ட முயலுங்கள்.

 

கரப்பான் பூச்சியை அலறவிடும் குறிப்புகள்:

 

1)எலுமிச்சம் பழம்

2)புதினா

 

எலுமிச்சம் பழத் தோலை நன்றாக காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் ஒரு கைப்பிடி புதினா இலையை நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.

 

இந்த இரண்டு பொடியையும் மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி லேசாக சூடுபடுத்துங்கள்.

 

பிறகு அரைத்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அதில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்துவிட்டால் அவற்றின் தொல்லை நீங்கும்.

 

1)பிரியாணி இலை

 

கரப்பான் பூச்சியை கட்டுக்குள் வைக்க பிரியாணி இலையை பயன்படுத்தலாம்.இந்த இலையில் இருந்து வீசும் நறுமணம் கரப்பான் பூச்சியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

 

பிரியாணி இலையை பவுடர் பதத்திற்கு அரைத்து கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவிவிட்டால் அதன் தொல்லை ஒழியும்.

 

1)காபி பொடி

 

ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி காபி தூள் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வைக்கவும்.இந்த காபியின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு கரப்பான் பூச்சிகள் கிண்ணத்தில் நுழையும்.இந்த காபி பொடியில் உள்ள காஃபின் என்ற வேதிப்பொருள் கரப்பான் பூச்சியை கொல்லக் கூடிய ஒன்று.

 

அதேபோல் மிளகு மற்றும் கிராம்பை இடித்து ஒரு கப் நீரில் கலந்து கரப்பான் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி சோடா உப்பு சேர்த்து கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் தூவினால் அதன் தொந்தரவு கட்டுப்படும்.

Exit mobile version