வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க!

0
203
Want to read deleted messages on WhatsApp? Follow this!

வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க!

தற்போது மக்கள் சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாடக உள்ளனர். உதவி செய்வது முதல் உபத்திரவம்  செய்வது வரை சமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்து விடுகிறது. அந்த வகையில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் வாட்ஸ்அப். இது பல்வேறு வழியில் தொழில் செய்பவர்கள் பயன்படுத்த எளிய முறையாக உள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் மக்களிடம் வந்தது முதல் ,இன்று வரை பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது. சில மாதம் முன்  வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் வாங்கியதால் பல சர்ச்சைகள் எழுந்தது.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்படும் அதற்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே அதாவது அக்ரி என்று அப்டேட்டை கொடுத்தால் மட்டுமே வாட்ஸ்அப் உபயோகப்படுத்த முடியும் என்ற பல சர்ச்சைகள் எழுந்தது. தங்களின் தனிப்பட்ட அனைத்தும் சேமிக்கப்பட்டு,அது தவறானவர்கள் கைக்கு சென்றடைந்தால் அது பெரும் விளைவை சந்திக்க நேரிடும் என கூறி நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். அதனையடுத்து தற்பொழுது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வாட்ஸ் அப்பில் நாம் தனிப்பட்ட முறையில் மெசேஜ்களை அனுப்பி வருகிறோம். அந்த மெசேஜ் களில் ஏதேனும் தவறு இருந்தால் எதிர் தரப்பினர்  பார்க்கும் முன்பே டெலிட் எவரி ஒன் கொடுத்தாள் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும்.

அந்த மெசேஜை காண இப்பொழுது ஒரு புதிய வழிமுறை வந்துள்ளது. முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று வாட்ஸ்அப் டெலிட் மெசேஜ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனையடுத்து அளிக்கப்பட்ட செய்திகளின் நகலை அணுகுவதற்கு செயலில் அனுமதி கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்தவுடன் நமது வாட்ஸ் ஆப்பில் யாரேனும் டெலிட் ஃபார் எவரி ஒன் கொடுக்கும் அனைத்து மெசேஜ் களும் இதில் சேமிக்கப்படும்.

இந்த செயலில் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்துவதற்காக மட்டுமே ஏதுவாக உள்ளது. ஐபோன்களில் வாட்ஸ்அப் நீக்கம் செய்யப்பட்ட செய்திகளை படிப்பதற்கு இந்த செயலி பயன்படாது. அதனால் ஐபோன் மொபைல் உபயோகம் செய்பவர்கள் வாட்ஸ் அப்பில் நீக்கப்பட்ட செய்தி நோட்டிபிகேஷன் பக்கத்தில் காண்பிக்கும். அதனை நீங்கள் லாங் பிரஸ் செய்தால் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்தி என்னவென்று உடனடியாக அறிந்து கொள்ளலாம்.