உங்கள் உடலில் உள்ள பித்தத்தை நிமிடத்தில் குறைக்க வேண்டுமா? உடனே இந்த கசாயம் செய்து பருகுங்கள்!!
இன்றைய உலகில் பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர்.இதனால் 30 வயதிலேயே நோய் பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.குறிப்பாக உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் பல வித தொந்தரவுகள் உண்டாகும்.உடல் சூடு,கொப்பளம்,தலைசுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் உடலில் பித்தம் இருந்தால் ஏற்படும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி
2)கொத்தமல்லி விதை
3)சீரகம்
4)வெந்தயம்
5)பூண்டு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும்
கால் தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.அதன் பிறகு நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு துண்டுகளை போட்டு அடுப்பில் வைத்து 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
ஒரு கப் நீர் அரை கப் அளவு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிக்கட்டி இளஞ்சூடாக இருக்கும் பொழுது பருக வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடலில் பித்தம் முழுமையாக குறையும்.தினமும் டீ,காபிக்கு பதில் இந்த மூலிகை கசாயத்தை செய்து குடித்து வந்தால் கபம்,பித்தம் உள்ளிட்ட பாதிப்புகள் குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.