கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க வேண்டுமா? இதோ எளிமையான டிப்ஸ் உங்களுக்காக!
நம்முடைய கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க எளிமையான சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐம்புலன்களில் முக்கியமான புலன் என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் எந்த வேலையும் சரியாக நடக்காது. அவ்வாறு முக்கியமான புலனாக இருக்கும் கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படும்.
இந்த வீக்கம் எதனால் ஏற்படுகின்றது என்றால் நம்முடைய உடல் மிகவும் சூடாக இருப்பது தான். மேலும் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைந்தாலும் கண்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் சில எளிமையான வழிமுறைகள்…
* கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் கட்டியை எடுத்து அப்படியே கண்களில் வீக்கம் உள்ள பகுதிகளில் வைத்து ஒத்தடம் கொடுப்பதன். மூலமாக வீக்கத்தை குறைக்கலாம்.
* கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க டீ பேக்குகளை பயன்படுத்தலாம். டீ பேக்குகளை எடுத்து பிரிட்ஜில் உள்ள ப்ரீசரில் 10 நிமிடம் வைக்க வேண்டும். பின்னர் அந்த டீ பேக்குகளை எடுத்து கண்களின் மேல் வைத்து ஒத்தடம் கொடுக்க கண் வீக்கம் குறையும்.
* கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை கழுவி வட்டமாக அறுத்து கண்களின் மேல் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்து விட்டால் கண்களின் வீக்கம் படிப்படியாக குறையும். ஒரு நாளைக்கு இரண்டு முறை வெள்ளரிக்காயை கண்களின் மேல் வைக்க வேண்டும்.
* கண்களின் மேல் கற்றாழை ஜெல்லை தேய்த்து வந்தால் கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.
* ஐ ரோலர்களை கொண்டு கண்களின் ஓரம், மேற்புறம், கீழ்பகுதி என்று மசாஜ் செய்வதன் மூலமும் கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.
* கண்களை சுற்றி தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறையும்.
* மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தியும் கண்களின் வீக்கம் குறையாமல் இருந்தால் கண் மருத்துவரை அணுக வேண்டும். பின்னர் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஐ கிரீம்களை வாங்கி தேய்த்து வந்தாலும் கண்களில் ஏற்படும் வீக்கம் குறையும்.