மஞ்சள் காமாலையை குறைக்க வேண்டுமா? நன்னாரி வேரை பொடித்து இதை கலந்து சாப்பிடுங்க!

0
152
Want to reduce jaundice? Mix nannari root and eat it!
மஞ்சள் காமாலையை குறைக்க வேண்டுமா? நன்னாரி வேரை பொடித்து இதை கலந்து சாப்பிடுங்க!
நம்மில் ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். இந்த மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிந்தால் முன்னரே இதை கவனித்து குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதாவது மஞ்சள் காமாலை நோய் முற்றினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து என்றால் அது கீழாநெல்லி தான். கீழாநெல்லியின் வேர், இலை என அனைத்தும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது. இதைப் பேலவே நன்னாரியும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நன்னாரியை நாம் உடல் சூட்டை தணிக்க பயன்படுத்தலாம். தற்பொழுது நன்னாரியை எவ்வாறு மஞ்சள் காமாலை நோயை குறைக்க பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நன்னாரி வேர்
* தேன்
செய்முறை…
முதலில் நன்னாரியில் இருந்து வேரை மட்டும் எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொடியை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.