Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க!

#image_title

மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க!

நம்மில் பலருக்கும் எதோ ஒரு விதத்தில் கவலைகள் இருக்கும். இந்த கவலைகள் அதிகமாகி மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றது. மன அழுத்தம் காரணமாக இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதே போல மன அழுத்தம் நமக்கு பல நோய்கள் ஏற்படுத்தி விடுகின்றது.

இந்த மன அழுத்தத்தை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகள் செய்வார்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது அதை குறைப்பதற்கு சுற்றுலா செல்வது, அமைதியாக இருப்பது, தியானம் செய்வது, விளையாட்டில் கவனம் செலுத்துதல் போன்று பலவித செயல்களை செய்வார்கள். இந்த பதிவில் அதிகமாக இருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் லைகோரஸ் டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு தயார். செய்வது என்பது பற்றியும் பார்க்கலாம்.

லைகோரஸ் என்பது அதிமதுரம் ஆகும். அதிமதுரத்தை சளி, இருமல் ஆகிய நோய்களை குணப்படுத்த பயன்படுத்தலாம். அதே போல இதில் டீ தயார் செய்து குடிக்கும் பொழுது அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். அதிகாரம் நமக்கு குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொடுக்கின்றது. இதனால் மூச்சுவிடவும் சிரமப்பட வேண்டியதில்லை.

அதிமதுரத்தை பயன்படுத்தி டீ தயார். செய்து குடிக்கும் பொழுது மன அழுத்தம் குறையும். அதாவது லைகோரஸ் டீ(அதிமதுரம்) குடிக்கும் பொழுது நம்முடைய உடலில் உள்ள கார்டிசோல் அளவு சமநிலைப்படுகின்றது. இதனால் மன அழுத்தம் குறைகின்றது. தற்பொழுது லைகோரஸ் டீ எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

லைகோரஸ் டீ தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* அதிமதுரம் பொடி
* நாட்டு சர்க்கரை

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் அளவு அதிமதுரம் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாட்டு சர்க்கரை அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்த பிறகு இதை இறக்கி இளஞ்சூடாக வந்த பிறகு குடிக்கலாம். இதை தினமும் தயார் செய்து குடித்து வரும் பொழுது மேற்கண்ட நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

Exit mobile version