மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க வேண்டுமா? பெருங்காயத் தண்ணீர் செய்து குடியுங்கள்! 

0
187
Want to relieve period pain? Make aloe vera water and drink it!
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க வேண்டுமா? பெருங்காயத் தண்ணீர் செய்து குடியுங்கள்!
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியை குறைக்க உதவும் பெருங்காயத் தண்ணீரை எப்படி செய்து குடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிடாய் நாட்களாகும். இந்த மூன்று நாட்களிலும் பெண்களுக்கு இரத்தப் போக்கு, கடுமையான வயிற்று வலி எல்லாம் ஏற்படும். இந்த வயிற்று வலியை குறைக்க நாம் பெருங்காயத்தை பயன்படுத்தலாம்.
பழங்காலத்தில் இருந்தே பெருங்காயத்தையும் ஒரு மருந்து பொருளாக முன்னோர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பெருங்காயத்தை நாம் சாதாரண வயிற்று வலியை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். தற்பொழுது இந்த பெருங்காயத்தை எவ்வாறு வயிற்று வலி மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பெருங்காயத் தூள்
* கருப்பு உப்பு
செய்முறை…
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதிகமாக கொதிக்க விடாமல் குடிக்கும் அளவிற்கு தண்ணீரை சூடு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் இந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இதை குடிக்கலாம்.
இவ்வாறு செய்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குறையும். அதே போல சாதாரணமான வயிற்று வலி வந்தால். அதையும் இந்த பெருங்காயத் தண்ணீர் குணப்படுத்தும்.