நம் காதுகளில் பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற அழுக்குகள் படிகிறது.இதை சிலர் பட்ஸ் கொண்டு அகற்றுகின்றனர்.இது ஆபத்தான ஒரு செயல் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் காதுகளில் அதிகளவு அழுக்கு படிந்தால் அவை அடைப்பை ஏற்படுத்தும்.அது மட்டுமின்றி காதில் அழுக்கு இருந்தால் குடைச்சல்,காதுகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
காதுகளில் உள்ள அழுக்குகளை பட்ஸ்,பின் ஊக்கு இன்றி எளிதில் வெளியேற்றும் சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளது.
TIPS 01
1)உப்பு
2)நீர்
கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு நீர் ஊற்றி சிட்டிகை அளவு உப்பு கலந்து கொள்ள வேண்டும்.இதை காதுகளின் துவாரத்தில் விட்டால் அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.பட்ஸ் இன்றி காது அழுக்குகளை நீக்க விரும்புபவர்கள் உப்பு நீர் பயன்படுத்தலாம்.
TIPS 02
1)பூண்டு பற்கள்
2)ஆலிவ் எண்ணெய்
வாணலி ஒன்றில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்ற வேண்டும்.பிறகு ஒரு சிறிய பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு லேசாக இடித்து ஆலிவ் எண்ணெயில் கலந்து சூடாக்கி கொள்ள வேண்டும்.
பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு காது துவாரங்களில் ஊற்றினால் உள் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.
TIPS 03
1)வெற்றிலை
ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை காதுகளில் விட்டால் மெழுகு அழுக்கு எளிதில் வந்துவிடும்.
TIPS 04
1)பெருங்காயம்
2)நல்லெண்ணெய்
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் சிட்டிகை அளவு பெருங்காயம் சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு காதுகளில் விட்டால் அழுக்குகள் வெளியேறிவிடும்.
TIPS 05
1)விளக்கெண்ணெய்
காது துவாரங்களில் விளக்கெண்ணெய் விடுவதன் மூலம் அழுக்குகளை எளிதில் அப்புறப்படுத்திவிட முடியும்.இதுபோன்ற இயற்கை வைத்தியங்கள் மூலம் காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்குங்கள்.