வீடு மற்றும் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறையை 10 நிமிடத்தில் நீக்க வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்!!
நம் வீடும், கழிவறையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும்பொழுது கால்களை சுத்தம் செய்து விட்டு உள்ளே நுழைய வேண்டும். இல்லையென்றால் வீட்டு டைல்ஸில் கறைகள் மற்றும் அழுக்கு படிந்து காணப்படும்.
அதேபோல் தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு- 1/4 கப்
*வாஷிங் பவுடர் – 2 தேக்கரண்டி
*கல் உப்பு – ஒரு கைப்பிடி அளவு
*வினிகர் – 3 முதல் 4 தேக்கரண்டி
*சோடா உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி வாஷிங் பவுடர், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1 தேக்கரண்டி சோடா உப்பு மற்றும் 3 முதல் 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு அரைக்கவும். இவ்வாறு அரைப்பதன் மூலம் அவை பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும்.
அடுத்து இந்த பேஸ்டை ஒரு பவுலுக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்பிரேயரில் இந்த கலவையை ஊற்றி வீடு மற்றும் பாத்ரூமில் அழுக்கு கறைகள், மஞ்சள் கறைகள், எண்ணெய் பிசுக்கு இருக்கும் இடத்தில் நன்கு ஸ்ப்ரே செய்து 15 முதல் 20 நிமிடம் வரை ஊற விடவும்.
பின்னர் டைல்ஸில் ஒட்டிருந்த கறைகள் ஊறி வந்த பின்னர் ஸ்க்ரப்பர் யூஸ் பண்ணி நன்கு தேய்க்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் டைல்ஸ் புதிது போன்று பளிச்சிடும்.