Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இயற்கை முறையில் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! 5 நிமிடத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்!!

#image_title

இயற்கை முறையில் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! 5 நிமிடத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்!!

கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் மனித உயிரை எடுக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தானவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.இந்த கொசுக்களால் டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டு நாம் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

தற்பொழுது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி விட்டது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீடுகளில் கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கொசுக்களை கொல்ல இரசாயனம் கலந்த ஆல் அவுட்,கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை விட வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் அனைத்து கொசுக்களையும் சில நிமிடத்தில் கொன்று விடலாம்.இதனால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரம் – 6

*ஓமம் – 1/4 தேக்கரண்டி

*வேப்பிலை – 4

*சாம்பிராணி – 2

*கடுகு எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.ஒரு குட்டி மண்பானை எடுத்து கொள்ள வேண்டும்.

2.அதில் ஓமம் 1/4 தேக்கரண்டி போட்டு கொள்ளவும்.

3.பிறகு அந்த பானைக்குள் பூஜைக்கு பயன்படுத்தும் சாம்பிராணி 2 எடுத்து நிற்க வைக்கவும்.

4.அதன் பின் பூஜைக்கு பயன்படுத்தும் மற்றொரு பொருளான கற்பூரம் 2 எடுத்து கையில் பொடி செய்து அந்த மண் பானையில் சேர்க்கவும்.

5.பிறகு மீண்டும் 2 கற்பூரத்தை எடுத்து சாம்பிராணி மேல் வைக்கவும்.

6.இதையடுத்து 3 அல்லது 4 மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பிலையை அதில் சேர்க்கவும்.

7.இறுதியாக 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.அதன் பின் பானையில் உள்ள சாம்பிராணி மற்றும் கற்பூரத்தை பற்ற வைக்கவும்.இவை நன்கு எரிந்து அணைந்த பின் புகை வரத் தொடங்கும்.அந்த சமயத்தில் வீட்டில் எங்கு கொசுக்கள் தொல்லை அதிகம் இருக்கிறதோ அங்கு வைக்க வேண்டும்.இப்படி செய்தால் 5 நிமிடத்தில் அனைத்து கொசுக்களும் மடிந்து விடும்.

Exit mobile version