1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

0
252
#image_title

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.ஆண்கள்,பெண்கள் என்று அனைவருக்கும் தங்கம் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.ஆனால் இன்று தங்கம் விற்கும் விலையை பார்த்தால் குண்டுமணி தங்கமாவது வாங்கிட முடியுமா என்ற சந்தேகமே எழ ஆரமித்து விடுகிறது.

பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காக நகை சேமித்து வருவார்கள்.இது சரியான திட்டமிடல் உள்ள பெற்றோர்களால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும்.

குடும்ப செலவிற்கே வாங்கும் வருமானம் சரியாக உள்ளது.இதில் எங்கிருந்து பணம் சேமித்து தங்கம் வாங்குவது என்று புலம்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியை தொடர்ந்து பின்பற்றவும்.இவ்வாறு செய்தால் வருடத்திற்கு குறைந்தது 1 பவுன் தங்கமாவது வாங்கிவிட முடியும்.

இவ்வாறு தங்கம் வாங்குவதை வழக்கமாக்கி கொண்டால் அதிக தங்கம் சேமிக்க நீங்களே சரியான திட்டமிடலை செய்வீர்கள்.

முதலில் உங்கள் வருமானத்தில் இருந்து குறைந்து 15% தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கவும்.

சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கு மட்டுமே சரியாக இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்கள் பார்ட் டைம் ஜாப் செய்து வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு கிடைக்கும் வருவாயை சேமிப்பாக்கி தங்கம் வாங்கலாம்.

நம்பிக்கையான நகை கடையில் சீட்டு கட்டி தங்கம் வாங்கலாம்.ஒரு சிலர் வெளியில் சீட்டு கட்டி அதில் கிடைக்கும் பணத்தில் தங்கம் வாங்குவார்கள்.அவ்வாறு தங்கம் வாங்குபவர்கள் வெளியில் சீட்டு போடுவதை விட நகை கடையில் சீட்டு போட்டு வாங்கும் பொழுது செய்கூலி, சேதாரம் மிச்சம் ஆகும்.

தங்களால் முடிந்த தொகையை ஒரு உண்டியலில் போட்டு சேமித்து வாருங்கள்.இதன் மூலம் தங்கம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

பிறந்த நாள்,திருமண நாள்,தீபாவளி,பொங்கல், அட்சயதிரிதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் ஒரு வருடத்தில் அதிகளவு தங்கம் சேரும்.மில்லி, கிராம், சவரன் என்று தங்களால் முடிந்த அளவு தங்கம் வாங்கி சேமியுங்கள்.