கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு விஸ்வகர்மா யோஜனா என்ற கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.கைவினைத் தொழிலிலை குடும்பத் தொழிலாக செய்து வருபவர்கள் மற்றும் சுயத் தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் விரிவாக்கம் செய்த ரூ.2,00,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அடிப்படை திறன் பயிற்சியை முடித்தவர்கள் எந்த ஆவணம் இன்றி ரூ.1,00,000 வரை கடன் பெற முடியும்.அதுவே மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெற்றவர்களுக்கு ரூ.2,00,000 வரை கடன் வழங்கப்படும்.இந்த கடனை 18 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.
காலணி தயாரிப்பவர், காலணி தைப்பவர், முடி திருத்தும் செய்பவர்.கொத்தனார், டெய்லர், சலவை தொழில் செய்பவர்கள்,கயிறு செய்பவர்கள் என்று 18 வகையான தொழில்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுகிறது.
விஸ்வகர்மா யோஜனா திட்டம்
முதலில் https://pmvishwakarma.gov.in/Home/HowToRegister என்ற போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
பிறகு தங்களுடைய மொபைல் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். பிறகு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்து பிரதமரின் விஸ்வகர்மா டிஜிட்டல் ஐடி மற்றும் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பொது சேவை மையத்திற்கு சென்று ஆதாரை கொண்டு பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை செய்து முடிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 18002677777 என்ற எண்ணிற்கு அழைத்து வேண்டிய விவரங்களை பெறலாம்.