பெண்கள் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அது அவர்களின் அழகு சார்ந்த பிரச்சனை தான். அதாவது உதடு கருப்பாக இருப்பது, கரு வளையம், முகச்சுருக்கம், முகப்பரு என்று தனித்தனியாக பிரச்சனைகள் இருக்கின்றது.
இவ்வாறு பலவகையான பிரச்சனைகளில் பெண்களுக்கு உதடு கருப்பாக இருப்பதும் முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது. இந்த உதடு கருப்பாக இருப்பதை மாற்ற தற்பொழுது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பின்விளைவுகளை பெண்கள் சந்திக்கின்றனர். எனவே இந்த உதட்டு கருமையை நீக்க சமையலுக்கு தாளிக்க பயன்படுத்தும் கடுகை நாம் பயன்படுத்தி சரி செய்யலாம். அது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கடுகு
* ரோஸ் வாட்டர்
* எலுமிச்சை சாறு
செய்முறை…
ஒரு மிக்சி ஜார் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கடுகு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ரோஸ்வாட்டர் மூன்று சொட்டு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் அரைத்த இந்த விழுதை கருப்பாக இருக்கும் உதட்டில் இதை தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருப்பாக இருக்கும் உதடு இயற்கையான முறையில் சிவப்பாக மாறும்.