எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கிய தமிழகம், கிராம ஊராட்சிக்கான முழு சுகாதாரத் திட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணியாக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கு கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், துணைத் தலைவர் ராஜசேகரன் ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டு கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும், நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,எழில் மிகு கிராமமாக கீழவடகரை ஊராட்சி பகுதி அமைய வேண்டும.அதற்க்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.