Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே வாரத்தில் உங்கள் தொப்பை கரைய வேண்டுமா? இதை மட்டும் குடிங்க!!

Want your belly to melt in a week? Just drink this!!

Want your belly to melt in a week? Just drink this!!

ஒரே வாரத்தில் உங்கள் தொப்பை கரைய வேண்டுமா? இதை மட்டும் குடிங்க!!

இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை உடல் எடை அதிகரிப்புதான். இதற்கு காரணமாக, உடல் உழைப்பு இல்லாமை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மது பழக்கம் போன்றவை உடல் எடையை அதிகரித்து, தொப்பையையும் உண்டாக்குகிறது.

இந்த தொப்பையை ஒரே வாரத்தில் கரைக்க, இந்த பானத்தை மட்டும் குடித்தால் போதுமானது. இதை ஆண் பெண் இருவருமே குடித்து பயன் பெறலாம்.

முதலில் ஒரு 50 முதல் 100 கிராம் இஞ்சி எடுத்து, சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பிறகு மேல் தோலை சீவிக் கொள்ளவும். அடுத்து அதை சிறு துநண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு இதை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். அதை ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே வைத்து விடவும்.

இந்த அரைத்த இஞ்சியிலிருந்த தண்ணீரானது மேலே தெளிந்து நிற்கும். அடியில் வெள்ளையாக சுண்ணாம்பு போல் நிற்கும். இந்த இஞ்சி தண்ணீரை மட்டும் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாதிரி கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளவும். இந்த தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விடவும்.

நன்றாக ஆறிய பிறகு இதை ஒரு ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதில் 3 பங்கு தேன் சேர்த்து கொள்ளவும். அதாவது 1 ஸ்பூன் இஞ்சி சாறு என்றால் 3 ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து வைத்து கொள்ளலாம். இதை சாதாரணமாக வெளியிலேயே வைத்து கொள்ளலாம்.

இதை ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம். இஞ்சியை அப்படியே வெறும் வயிற்றில் எடுப்பதால், அல்சர் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்தும். இது போன்று வடிகட்டி பயன் படுத்துவதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் வராது. தொப்பையும் சீக்கிரமாக கரைய ஆரம்பிக்கும். இதை எப்படி சாப்பிடுவது என்றால், காலையில் வெறும் வயிற்றில், மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில், 1 ஸ்பூன் கலந்து குடிக்கவும். உங்களுக்கு அல்சர் பிரச்சினை இல்லையென்றால் இதனுடன் அரை எழுமிச்சம் பழம் பிழிந்து குடிக்கலாம். இது கூடவே சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

Exit mobile version