Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

ஒவ்வொருவர் வீட்டில் தினந்தோறும் பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளி, செவ்வாய் என குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பூஜை செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் நம் பூஜையறை கோவில் போல் இருக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது தான்.

 

அவ்வாறு பூஜை அறையை எப்படி கோவில் போல் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கல் உப்பு சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்க்க வேண்டும். சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். ஏலக்காய் தூள் சேர்ப்பதன் மூலம் நல்ல நறுமணம் மற்றும் பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது.

 

முதலில் இந்த தண்ணீரை வைத்து பூஜை அறை முழுவதும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் சாமி படங்கள், சாமி விக்ரகங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யலாம். அதனை எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கட்டி சந்தனம் மற்றும் சிறிதளவு ஜவ்வாது பவுடர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனை சாமி படங்களுக்கு பொட்டு வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு ரோஸ் வாட்டர் அதில் சிறிதளவு ஜவ்வாது கலந்து கொள்ள வேண்டும் அதில் நாம் வைத்துள்ள பூக்களை நனைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்கும்.

 

 

Exit mobile version