Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை.. நீங்கள் இலவச VPN செயலி பயன்படுத்துபவரா? அப்போ யோசிக்காமல் இதை செய்யுங்கள்!!

Warning.. Are you a free VPN app user? Then do this without thinking!!

Warning.. Are you a free VPN app user? Then do this without thinking!!

எச்சரிக்கை.. நீங்கள் இலவச VPN செயலி பயன்படுத்துபவரா? அப்போ யோசிக்காமல் இதை செய்யுங்கள்!!

இன்றைய உலகில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.மொபைல் ரீசார்ஜ் முதல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தையும் டிஜிட்டல் முறையில் செய்து வருகின்றோம்.இதனால் அனைத்து வேலைகளும் சுலபமாகி விட்டது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன் யூசர்கள் மிகவும் கவமனாக இருப்பது அவசியமாகும்.காரணம் உங்கள் போனில் உள்ள செயலிகளை ஹேக் செய்து அதன் மூலம் தங்களுக்கே தெரியாமல் தங்களின் டேட்டாக்கள் திருடப்படுகிறது.இதில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான SuperVPN மிகவும் ஆபத்தான செயலி என்று கூகுள் மற்றும் VPNPro அறிவித்திருக்கிறது.உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இந்த SuperVPN செயலி இருந்தால் அதை உடனே டெலிட் செய்து விடுங்கள்.

SuperVPN ஒரு இலவச VPN கிளையன்ட் செயலி ஆகும்.இந்த செயலின் மூலம் ஹேக்கர்கள் தங்களின் தவகல்களை எளிதில் திருடிவிட முடியும்.இதனால் கூகுள் மற்றும் VPNPro இணைந்து SuperVPNக்குப் பின்னால் உள்ள டெவலப்பர்களை கண்டறிய முயற்சித்தனர்.ஆனால் அவற்றை செய்யமுடியவில்லை என்பதால் கடந்த ஏப்ரல் 7 அன்று Play Store-இல் இருந்து SuperVPN செயலியை கூகுள் நிறுவனம் ஆகற்றியது.எனவே உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் SuperVPN செயலி இருந்தால் அதை உடனே அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள்.இதுபோன்ற ஆபத்தான செயலிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாமென்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Exit mobile version