Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்!

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்!

தற்போதைய நவீன உலகில் அனைவரது வீட்டிலும் ரெஃப்ரிஜிரேட்டர் உள்ளது. அது வாங்கும் பொழுதே சில பொருட்கள் அதில் வைக்கலாம் சில பொருட்கள் அதில் வைக்கக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை கண்டு கொள்ளாமல் அந்த தவற்றை மீண்டும் மீண்டும் செய்து அவர்களது உடல் நலத்தையே கெடுத்துக் கொள்கின்றனர்.

சில உணவுப் பொருட்கள் நாம் வெளியில் சேமித்து வைப்பதை விட ரெஃப்ரிஜிரேட்டரில் சேமித்து வைப்பதால் பல நாட்கள் நாம் உபயோகித்துக் கொள்ளும் வகையில் அதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வாறு சில உணவுகளை வைப்பதால் அவற்றின் முழு சத்துக்களும் போய்விடுகிறது.

அதில் முதலாவதாக இருப்பது முட்டை. முட்டையை ரெஃப்ரிஜிரேட்டரில் வைப்பதால் அதனின் நிலை மாறி அதன் சத்துக்களும் போய்விடுகிறது. முட்டையை அதிக நேரம் ரெஃப்ரிஜிரேட்டில் வைப்பதால் அது சுருங்கும் நிலை ஏற்பட்டு நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் ஏதும் கிடைக்காமலே போகிறது. அவ்வாறு நாம் பிரிட்ஜில் வைக்கும் முட்டையை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாக கூடும்.

இரண்டாவதாக சீஸ்:

சிலவகை சீர்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனென்றால் அதில் அமைப்பு தன்மையானது நீங்கிவிடும். அந்த வகையில் கேம்பிரிட் மற்றும் பிரென்ச் சீர்களை நாம் பிரிட்ஜில் வைக்க கூடாது.

மூன்றாவதாக அரிசி:

நீங்கள் அரிசியை ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்து சமைத்தால் அதனின் சுவை முழுமையும் நீங்கி நீங்கள் சமைக்கும் பொழுது எந்த ஒரு அரோமாவும் கிடைக்காது. அந்த வகையில் ரெஃப்ரிஜிரேட்டரில் அரிசியை வைத்தால் அதன் சுவை முழுதும் போய்விடும் அதற்கு மாறாக நீங்கள் வைத்து சமைத்தால் அந்த உணவை உடனடியாக உட்கொள்ள வேண்டும். அடுத்த வேலைக்கு வைத்து உட்கொள்ள கூடாது.

நான்காவதாக பாஸ்தா:

அரிசி போலவே இதுவும் அதன் சுவையை மாற்றிவிடும். இதனை பிரிட்ஜில் வைப்பதால் அதன் மாவுச்சத்து தன்மையை இழக்க நேரிடும். இவ்வாறா தன்மையை இழப்பதால் சுவையற்ற பாஸ்தாவாக தான் அது இருக்கும்.

Exit mobile version