தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 17% அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 448.0 (மி மீ) மழை பெய்துள்ளது. மேலும் இந்த மழை காலக்கட்டத்தில் சுமார் 384.5 (மி மீ) மட்டும்தான் மழை பொழியும்.
அதன் அடிப்படையில் சென்னையில் மட்டும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 18% அதிகமாக பொழிந்துள்ளது. மேலும் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் வருகிற 12-ம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனால் வரும் 11 மற்றும் 12-ம் தேதி ராமநாதபுரம் முதல் கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.