Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

தமிழ்நாட்டில் பருவமழை மாற்றத்தால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த முறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பாளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மிதமான மழையே இருந்து வந்த சூழலில் மீண்டும் மாநில மையம் புதிய அலார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்தம் மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த மண்டலமானது புயலாக மாறும் பட்சத்தில் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் கொடுத்துள்ளனர். இந்த எட்டு மாவட்டங்களிலும் எதிர்பார்க்க முடியாத விதத்தில் அதிக அளவு கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் வரும 9 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் நாகை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அல்லது கொடுத்துள்ளது.

இதற்கு முன்பதாகவே செய்த கனமழையின் போது அந்தந்த மாநிலங்களில் உள்ள பேரிடர் மேலாண்மைகளை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது ரெட்ட அலார்ட் கொடுத்துள்ள நிலையில் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்க உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version