எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்…

0
135

எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்…

வீட்டின் சமையலறையில் ஒரு அங்கமாக உள்ள கேஸ் சிலிண்டரின் காலாவதி மாதத்தை எப்படி தெரிந்து கொள்வது என பார்ப்போம்….

நாம் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர்களை உபயோகப்படுத்துவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பெரிதும் கண்டுகொள்ளாமலே சில கேஸ் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அதே சிலிண்டர்களை நிரப்பி விநியோகம் செய்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் கேஸ் கசைவு மற்றும் விரிசல் போன்று ஏற்பட்டு பேராபத்து நிகழவும் வாய்ப்புள்ளது.

சிலிண்டர்களின் காலாவதி நாட்களை நாமே தெரிந்து கொள்வோம் வாருங்கள்…

நாம் கேஸ் சிலிண்டர்களின் உட்புற கம்பியில் சில எழுத்துக்களுடன் கூடிய எண்கள் எழுதப்பட்டு இருக்கும். அவை ஏ, பி, சி, டி என்று ஆங்கில எழுத்தும், எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஏ என்ற எழுத்து மார்ச் வரையும், பி- ஜூன் வரையும், சி- செப்டம்பர் வரையும், டி- டிசம்பர் வரையும் என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் பி 21 என குறிப்பிடப்பட்டிருந்தால், அது ஜூன் 2021வுடன் முடிவடைகிறது அதன் அர்த்தம் ஆகும்.