எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
172
Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது என தெரிவிக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் செல்போன் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் வாரத்துக்கு இருமுறை சுழற்சி அடிப்படையில் சோதனை செய்ய வேண்டும். அரசு பஸ்களில் மாணவர்கள் பயணிக்கும் போது படிக்கட்டில் நின்று பயணம் செய்யக் கூடாது. பேருந்தில் ஒருங்கீனமாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும்.

தனியார் மற்றும் தனியாக வாகனங்களில் வருகை புரியும் மாணவர்களின் பாதுகாப்பாய் உறுதி செய்திடும் வகையில் டிரைவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். பின்னர் பள்ளி நேரம் முடிவடைந்த பின்பு ஒவ்வொரு வகுப்பறைகளை மூடுவதற்கு முன்பு அறையில் எவருமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் அமர்ந்திருப்பதை தவிர்த்திடும் வகையில் வகுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பணியில் உள்ள ஆசிரியர்கள் பாடவேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். உணவு இடைவெளியில் இடைவெளியின் போது மாணவ மாணவிகள் சுத்தமாகவும் பாதுகாப்பான இடத்தில் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணுவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளில் எவ்வித சமரசத்திற்கு இடம் அளிக்காமல் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். எவ்வித தகவலும் இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு வராத மாணவ மாணவிகளின் விவரம் குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்த  வேண்டும்.