எச்சரிக்கை!! இந்த பழக்கம் இருந்தால் கட்டாயம் மூலநோய் வரும்!!

0
117
Warning!! If you have this habit, you will get hemorrhoids!!

எச்சரிக்கை!! இந்த பழக்கம் இருந்தால் கட்டாயம் மூலநோய் வரும்!!

மூலநோயின் ஆரம்ப நிலை மலச்சிக்கலே. இன்றைய காலகட்டத்தில், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை மிக எளிதாக எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலும் முதியவர்களுக்கு மட்டுமே மூல நோய் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போதைய நவீன உலகில் குழந்தைகள் ,இளைஞர்கள் என இந்த மூல நோயின் அறிகுறிகளை வரத் தொடங்கி விட்டன.

நமது அன்றாட வாழ்க்கை முறையும், உணவு தேடுதலுமே இந்நோயின் வரவை அதிகப்படுத்தி விட்டது எனவும் கூறலாம். தினசரி சரியான முறையில் மலம் கழியாமல் இருத்தல் ,மலம் கழிப்பதில் அதிக அழுத்தத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்கள் மூலநோயை நோக்கிச் செல்லும் அறிகுறிகள் .இது Piles and hemorrhoids என்று அழைக்கப்படுகிறது. மூலத்தில் இரண்டு வகை உள்ளன. அவை உள் மூலம் மற்றும் வெளிமூலம்.

நம் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினாலே மூலநோய் வராமல் தடுக்க இயலும். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளாமல் இருத்தல் ,உடற்பயிற்சி செய்யாது இருத்தல், மசாலா பொருள்களை அதிக அளவில் உட்கொள்ளுதல் ,எண்ணெய் நிறைந்த உணவை உட்கொள்ளல் போன்ற செயல்கள் மூல நோய்க்கு வழி வகிக்கிறது. இன்றைய குழந்தைகள் அதிகமான ஜங்க் ஃபுட் உட்கொள்வதால் அவர்களையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை .பால் பொருட்கள் மலச்சிக்கலை அதிகரிக்கிறது .இதன் காரணமாக மூல தசையின் நிலை மோசமடைகிறது.

பழைய எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள் காரமான மற்றும் ஆயத்த உணவு பொருள்கள் மூலநோய் ஏற்பட வழிவகிக்கிறது .ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும் .அதிக நேரம் உட்காந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் உட்காரும்போது குஷன் சேர்களை தவிர்த்து விட்டு வயர்களால் பின்னப்பட்ட பிரம்பாலான சேர்களை பயன்படுத்தலாம்.