பல்ஸ் பிரஷர் என்பது இதய துடிப்பின் போது தமனி சுருங்குதல் மற்றும் விரிவடைதல் ஆகியவற்றை குறிக்கிறது.இதயம் துடிக்கும் பொழுது தமனி சுருங்குவதை சிஸ்டாலிக் என்று அழைக்கின்றோம்.அதுவே இதயத் துடிப்பின் போது தமனி விரிவடைவதை டயஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கின்றோம்.
இந்த இரண்டு அழுத்தங்களுக்கும் இடையே ஏற்படும் அழுத்தத்தை துடிப்பு அழுத்தம் என்கின்றோம்.மனிதர்களுக்கு சாதாரண பல்ஸ் பிரஷர் என்பது 40mmHgக்குள் இருக்கும்.ஒருவேளை உங்களுக்கு பல்ஸ் பிரஷர் என்பது 60 mmHgக்குள் இருந்தால் அது உயர் துடிப்பு பிரச்சனை இருப்பதை காட்டுகிறது.
அதுவே உங்கள் பல்ஸ் பிரஷர் 50 mmHg அல்லது அதற்கு மேல் இருந்தால் கண் நோய்,இருதய நோய்,சிறுநீரக நோய் போன்றவை இருக்கிறது என்பதை குறிக்கிறது.இந்த பல்ஸ் பிரஷரை நாடியழுத்த மானியை கொண்டு கணக்கிடலாம்.
18 முதல் 60 வயதிற்குள் இருக்கும் நபர்களுக்கு அவர்களின் இரத்த அழுத்த அளவு 120/80 mmHg அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்.
60 வயதை கடந்தவர்களுக்கு இரத்த அழுத்த அளவு 140/90 mmHgக்கு கீழ் இருக்கும்.ஒருவர் ஓய்வு நேரத்தில் இருக்கும் பொழுது அவரின் இரத்த அழுத்த அளவு 140/90 mmHg என்ற அளவில் இருக்கும்.இந்த அளவு அதிகமானால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.பல்ஸ் பிரஷர் அதிகமாக இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே பல்ஸ் பிரஷரை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சில விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.
பல்ஸ் பிரஷர் அதிகரிக்காமல் இருக்க புகைப்பழத்தை கைவிட வேண்டும்.உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு,வாழைப்பழம் போன்றவற்றை தினசரி சாப்பிட வேண்டும்.க்ரீன் டீ,பிளாக் போன்ற பானங்களை பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.பழச்சாறு,பச்சை காய்கறிகள் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.