மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

0
98

கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று படிப்படியாக இல்லை என்ற நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதியில் இருந்து இந்த நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணம் மக்களிடம் காணப்பட்ட அலட்சியம்தான் என்று சொல்லப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எதையும் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல நீ நோய்தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் எல்லோரும் நிச்சயமாக தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று முன்பு தெரிவித்து வந்த மத்திய அரசு தற்சமயம் வீட்டில் இருக்கும் சமயத்தில் கூட முகக் கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் மக்கள் எல்லோரும் பயம் காரணமாக, பல இடங்களில் மருத்துவமனை படுக்கைகளை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் எனவும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், தெரிவித்திருக்கிறார்.
அதேபோல இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது அறவே இல்லை என்று தெரிவித்த அவர் போதுமான ஆக்சிஜன் இருக்கிறது. ஆனால் அதனை அந்தந்த இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் சவாலான வேலையாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தற்சமயம் சூழல் எப்படி இருக்கிறது என்றால் வீட்டுக்குள்ளேயே முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருந்து வருகிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதேபோல தனிமனித இடைவேளை எந்த அளவிற்கு கடைபிடிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு இந்த நோய் தொற்று நோய் பரவல் குறைந்திருப்பது ஆய்வின் மூலமாக தெரியவந்திருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.