Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை: பூண்டு வாங்கும் போது இதை கவனிங்க! நாட்டுப்பூண்டு போலவே இருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சைனா பூண்டு!

எச்சரிக்கை: பூண்டு வாங்கும் போது இதை கவனிங்க! நாட்டுப்பூண்டு போலவே இருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சைனா பூண்டு!

பூண்டு வாங்கும் தாய்மார்கள் இதைத் தெரிந்து கொண்டு பூண்டு வாங்குங்கள்.பூண்டில் மொத்தம் ஐந்து வகை உண்டு.அதாவது 1.நாட்டுப்பூண்டு அல்லது தரைப்பூண்டு 2.மலைப்பூண்டு 3.ஒரு பல் பூண்டு 4.சைனா பூண்டு 5.கருப்பு பூண்டு.

நாட்டு பூண்டு மற்றும் சைனா பூண்டை தவிர்த்து மற்ற மூன்று வகைகளின் விலையும் பன்மடங்கு அதிகம்.சாதாரண வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதும் கடினம்.ஆனால் சைனா பூண்டை பயன்படுத்தினால் பல்வேறு ஆபத்துகள் வரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டுப்பூண்டு மற்றும் சைனா பூண்டு இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்.அதாவது சைனா பூண்டில் பூண்டு பளபளப்பாக தெரிவதற்காக குளோரினை கொண்டு ப்ளீச் செய்வதாகவும்,சைனாவில் பூண்டை விளைவிக்க பயன்படுத்தப்படும் உரங்களில் மெத்தில் புரோமைட் என்னும் மனித உடம்புக்கு கேடு விளைவிக்க கூடிய மிகவும் ஆபத்தான பொருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து பல்வேறு பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளும் வெளியாகியுள்ளது.எனவே பூண்டை வாங்கும் பொழுது நாட்டுப் பூண்டுதான என்று தாய்மார்கள் பார்த்து வாங்குங்கள்.

பூண்டுகளில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பது எப்படி?

மலைப்பூண்டு: பொதுவாகவே மலைபூண்டு ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையக்கூடியவை.இந்த மழை பூண்டை பார்க்கும் பொழுது ஒருவித அழுக்கு படிந்த நிறத்திலும் அதன் பல் பிங்க் நிறத்திலும் காணப்படும்.நாட்டு பூண்டை விட மலைப்பூண்டின் விலை ஒன்றிலிருந்து மூன்றும் மடங்கு வரை விலை அதிகம்.

ஒரு பல் பூண்டு: பெயர்க்கு ஏற்றார் போலவே ஒரு பல் பூண்டில் பெரிதாகவே ஒரு பல் மட்டுமே இருக்கும்.இது பொதுவாக ஹிமாலயன் பிரதேசத்தில் வளரக்கூடியது.இதுவும் நாட்டு பூண்டை விட சத்தும் அதிகம் விலையும் ஒன்றிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகம்.

கருப்பு பூண்டு: சாதாரண பூண்டை ஒருவித பதப்படுத்துதலுக்கு உட்படுத்தி இந்த கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது.இது அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக கருதப்படுகிறது எனினும் இந்த பூண்டு ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.

நாட்டுப்பூண்டு மற்றும் சைனா பூண்டு இவை இரண்டிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிறிது கடினம்.ஏனெனில் சைனா பூண்டு நாட்டு பூண்டை போலவே இருக்கும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வித்தியாசங்களை வைத்து மட்டுமே சைனா பூண்டை கண்டுபிடிக்க இயலும்.

அதாவது பூண்டில் சொத்தைகள் இல்லாமல் சிறிது கூட அழுக்கு படியாமல் சுத்தமான வெள்ளை நிறத்தில் காணப்படும்.நாட்டுப்பூண்டு சிறிதளவு அழுக்கு படிந்த மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படும்.

சைனா பூண்டின் வேறுகள் வெட்டப்பட்டிருக்கும்.நாட்டுப் பூண்டில் வேர்கள் வெட்டப்பட்டிருக்காது.

மேலே கூறிய மூன்று வகை பூண்டுகளையும் தினசரி பயன்பாட்டிற்கு மக்கள் பயன்படுத்துவது கடினம் அது மட்டுமின்றி தரைப்பூண்டு என்று சொல்லப்படும் நாட்டு பூண்டு தான் பொதுவாக அனைவராலும் வாங்கப்படுகிறது.அதனால் நாட்டுப் பூண்டிருக்கும் சைனா பூண்டிருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.இனி பூண்டை வாங்கும் பொழுதை இதை கவனித்து வாங்குங்கள்.

Exit mobile version