பெண்களுக்கு கருப்பை என்ற உறுப்பு இருந்தால் மட்டுமே பெண்களால் தாய்மை அடைய முடியும்.இந்த கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமான விஷயமாகும்.கருப்பையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவை மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.அதேபோல் கருத்தரிப்பதில் தாமதம் அல்லது கருத்தரிக்க வாய்ப்பில்லாமல் போதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
தற்பொழுது கருப்பை சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.நீர்க்கட்டி,கருப்பை வாய் புற்றுநோய்,கருமுட்டை குறைதல்,கருமுட்டை வெடிக்காமல் போதல் போன்ற கருப்பை சார்ந்த பிரச்சனைகள் வரிசையில் கருப்பை இறங்குதலும் இணைகிறது.
பெண்களின் கருப்பை அவர்களின் யோனி பகுதியை நோக்கி இறங்குவதை தான் கருப்பை இறங்குதல் என்று சொல்கிறோம்.பெண்களின் கருப்பையானது அனைத்து பக்கமும் சுருங்கி விரியும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த கருப்பை இருக்கும் இடத்தைவிட்டு கீழே இறங்குவதை கருப்பை இறக்கம் என்கின்றோம்.
இந்த கருப்பை இறக்கப் பிரச்சனையை அனைத்து பெண்களும் எதிர்கொள்வதில்லை.மாதவிடாய் உதிர்வு நின்ற பெண்கள்,50 வயதை கடந்த பெண்கள் போன்றவர்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
கருப்பை இறக்கம் யாருக்கு வர வாய்ப்பிருக்கிறது?
1)50 வயதை கடந்த பெண்கள்
2)உடல் பருமனாக உள்ள பெண்கள்
3)கருப்பை பலவீனமாக உள்ள பெண்கள்
இந்த கருப்பை இறக்கம் காரணமாக அதை அகற்றும் நிலைக்கு பெண்கள் செல்ல வேண்டி உள்ளது.
கருப்பை இறக்க அறிகுறிகள்:
1)கருப்பை சுற்றிய தசைகள் பலவீனமாதல்
2)சிறுநீரக பிரச்சனை
3)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
4)இருமல்,தும்மல் ஏற்படும் போது சிறுநீர் கசிதல்
5)இடுப்பு வலி
6)அனைத்து நேரங்களிலும் வெள்ளைப்போக்கு
7)அதிக தூர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்
8)பெண் உறுப்பு உலர்ந்து போதல்
9)பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் புண்கள்
சிலருக்கு கருப்பை இறக்கம் காரணமாக உடலுறவின் போது அதிக இரத்தப்போக்கு,வலி போன்றவை ஏற்படலாம்.பிறகு சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் அச்சப்பட வேண்டாம்.உடனடியாக மருத்துவரை அணுகி உரிய தீர்வு காணுங்கள்.அதேபோல் நாற்பது வயதை கடந்தவர்கள் கருப்பை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.