உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவு அடிப்படையான ஒன்று.ஆரோக்கியமான உணவு உடலில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உதவுகிறது.ஆனால் இன்று பலரது வீடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணும் உணவுகளே உட்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது அம்மா,பாட்டி காலத்தில் மூன்று வேளையும் சூடான உணவுகள் சமைத்து உண்ணும் பழக்கம் இருந்தது.ஆனால் இன்றைய நவீன காலத்தில் உணவு சமைப்பது எனது ஒரு கடின வேலையாக பார்க்கப்படுகிறது.ஒரு சிலரது வீட்டில் ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.ஆனால் இப்படி நீங்கள் சூடுபடுத்தி சாப்பிடும் சில உணவுகள் தங்களுக்கு விஷமாக மாறிவிடும்.
1)பிரியாணி
உங்களுக்கு அனைவருக்கும் பிரியாணி விருப்ப உணவாக இருக்கும்.ஆனால் இந்த பிரியாணியை சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் உங்கள் உணவு மண்டலம் கடுமையாக பாதிப்படையும்.
2)கீரைகள்
அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டிருக்கும் கீரையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது புட் பாய்சனாக மாறுகிறது.
3)முட்டை உணவு
உடலுக்கு தேவையான புரதம் முட்டையில் இருந்து கிடைக்கிறது.ஆனால் முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்டால் அது உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
4)உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பயன்படுத்தி சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அவை நஞ்சாக மாறுகிறது.
5)கோழி
சமைத்த கோழி இறைச்சியை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
6)காளான்
குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காளான் உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அவை நஞ்சாக மாறுகிறது.
7)பீட்ரூட்
இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 சத்துகளை கொண்டிருக்கும் பீட்ரூட் கிழங்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது அவை நமது உடல் ஆரோக்கியத்திற்கு விஷமாக மாறிவிடும்.