பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் இன்னும் நான்கு ஆண்டுகள் தொற்று பரவல் நீடிக்கும்

0
115

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியது. அந்த நோய் தொற்று தற்போது வரையில் நீடித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வராமல் இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்தாலும் தற்சமயம் இந்த நோய்த் தொற்று பரவல் குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னால் நாளொன்றுக்கு 36 ஆயிரம் என்ற நோய் தொற்று பாதிப்பின் நிலவரம் தற்சமயம் 36 ஆயிரத்திலிருந்து ஒன்பது ஆயிரமாக குறைந்து இருப்பது சற்றே நிம்மதி தருகின்றது.

அதோடு தற்சமயம் நோய்த்தொற்று தொடர்பாக நாட்டில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பொது மக்கள் எல்லோரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் எல்லோரும் தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்சமயம் எல்லோரும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க ஸ்விட்சர்லாந்தில் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. அங்கே 36 வயதிற்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 35 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்து தடுப்பூசியை சேர்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.இருந்தாலும் 18 முதல் 34 வயது இருப்பவர்கள் பலரும் தடுப்பூசி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல 20 வயதிற்கும் உட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் அதிகாரிகள் உடனடியாக இதனை கவனித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். இப்படி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டினால் நோய்த்தொற்று பரவல் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.