Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை.. இது உங்கள் உடலில் Vitamin B-12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்!!

Warning.. These are signs of Vitamin B-12 deficiency in your body!!

Warning.. These are signs of Vitamin B-12 deficiency in your body!! Warning.. These are signs of Vitamin B-12 deficiency in your body!!

எச்சரிக்கை.. இது உங்கள் உடலில் Vitamin B-12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்!!

நம் உடலுக்கு தேவையான ஆற்றல் வைட்டமின்கள் மூலம் கிடைக்கின்றது.இதில் வைட்டமின் பி-12 என்பது மூளை மற்றும் நரம்பு திசு ஆரோக்கியத்திற்கு தேவைப்படுபாவையாக உள்ளது.
அதேபோல் ஒவ்வொரு வைட்டமினும் உடலில் இருக்கின்ற உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதனால் நாம் உண்ணும் உணவில் வைட்டமின்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.உடலுக்கு தேவையான வைட்டமின் பி-12 கிடைக்கவில்லை எனில் உடல் அதிகப்படியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.வைட்டமின் பி-12 குறைபாடு ஏற்பட்டால் மூளை சார்ந்த பிரச்சனை,நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

நமது இந்தியாவில் சுமார் 74% மக்கள் வைட்டமின் பி-12 குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.இதில் 50% மக்கள் வைட்டமின் பி-12 குறைபாடு காரணமாக உடல்நலக் கோளாறுகளை கொண்டுள்ளனர்.

வைட்டமின் பி-12:

நமது உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க,உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்த,
உடல் செயல்திறன் மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்த வைட்டமின் பி-12 அவசியயமான ஒன்றாக திகழ்கிறது.அது மட்டுமின்றி மனசோர்வு,கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

வைட்டமின் பி-12 குறைபாட்டிற்கான அறிகுறிகள்:

1)சருமம் வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்

2)அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் மன சோர்வு ஏற்படுதல்

3)மன குழப்பம் ஏற்படுதல்

4)மலச்சிக்கல்,பசியின்மை ஏற்படுதல்

5)கை மற்றும் கால்கள் மரத்து போதல்

6)இரத்த சோகை

7)நரம்பு பாதிப்பு

வைட்டமின் பி-12 சத்து நிறைந்த உணவுகள்:

இறைச்சி,மீன்,முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிகளவு வைட்டமின் பி 12 உள்ளது.அதேபோல் சைவ உணவ உங்களை சரிவித அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி-12 கிடைக்கும்

Exit mobile version