Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை.. இந்த உணவுப்பழக்கம் ULCER-ஐ உண்டாக்கலாம்!! என்ன சாப்பிட்டால் கியூர் ஆகும்?

அல்சர் எனும் வயிற்றுப்புண் பாதிப்பை பலரும் சந்திக்கின்றனர்.இந்த புண்கள் இரைப்பை புண்கள்,குடல் புண்கள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிறு எரியும் உணர்வு ஏற்படும்.இந்த உணர்வு சில நேரம் வரை நீடிக்கலாம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.

வயிற்றுப்புண் ஏற்பட காரணங்கள்:

1)காரமான உணவுகள்
2)புளித்த உணவுகள்
3)தாமதமான உணவுப்பழக்கம்
4)துரித உணவுகள்

வயிற்றுப்புண் அறிகுறிகள்:

1)வயிறு எரிச்சல்
2)நெஞ்செரிச்சல்
3)வயிற்று வலி
4)அடிக்கடி மலம் கழிக்கும் நிலை
5)கருப்பு மலம் வெளியேறுதல்

அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

தயிர்,மஞ்சள் பானம்,பூண்டு தேநீர்,பழ வகைகள்,தேன் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவை தாமதிக்காமல் உடனடியாக உட்கொள்ள வேண்டும்.காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.குளிர்ச்சி நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.அதிக புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.புரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.முட்டை,மீன் போன்றவை அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது.மணத்தக்காளி,அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் குணமாகும்.

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காஃபின் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.இது அல்சரை தீவிரமாக்கிவிடும்.அதேபோல் அசைவ உணவுகளை அதிகளவு உட்கொண்டால் அல்சர் பாதிப்பு தீவிரமாகிவிடும்.அல்சர் இருப்பவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்க்க வேண்டும்.மதுப் பழக்கம் இருந்தால் அது அல்சரை தீவிரமாக்கிவிடும்.

உணவுகள் சூடாக இருக்கும் பொழுது அதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.இது அல்சர் பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

Exit mobile version