குற்றவாளிகளே எச்சரிக்கை! உண்மையை படம்பிடிக்கும் நியூ மெஷின்!
தமிழக போலீசாருக்கு உண்மை சம்பவங்களை கண்டறிய புதுவித டெக்னிக் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.அதவாது நமது தமிழகத்தில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே பல பிரச்சனைகள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.அவ்வாறு கலவரம் ஏற்படும் போது இருவரில் யார் மேல் தவறு உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை.அதுமட்டுமின்றி அங்கு நடக்கும் உண்மை சம்பவங்களும் என்னவென்று தெரியவில்லை.இதனை கண்டறியும் வகையில் தற்போது தமிழ்நாடு போலீசாருக்கு காலர் கேமரா வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த காலர் கேமரா போலீசாருக்கு அதிகளவு பயனுள்ளதாக இருக்கும்.இந்த கேமராவை காலரினில் செட் செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு இது ரெகார்டு செய்ய ஆரம்பித்துவிடு.மேலும் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் அங்கு நடப்பதை கண்டறிய எடுத்து செல்ல, இது ஏதுவாக இருக்கும்.குறிப்பாக மறியலில் ஈடுபடுவோர் எந்த விதத்தில் போலீசாரை எதிர்கின்றனர் என்பதை இந்த கேமரா மூலம் அறிந்துகொள்ளலாம்.ஏனென்றால் இந்த கேமராவை பொருத்தியவுடன் அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பதிவாக ஆரம்பித்துவிடும்.
அதனால் போலீசார் மேல் தவறு உள்ளதா அல்லது எதிர் தரப்பினர் மேல் தவறு உள்ளதா என்பதை எளிதாக கண்டறிய முடியும்.இந்த கேமராவின் சிறப்பு அம்சமானது,ஏதேனும் ஓர் நிகழ்வை பதிவு செய்துவிட்டால் அதனை அளிக்க முடியாது.அதனால் சம்பவ இடத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடந்தாலும் அதன் உண்மையை இந்த கேமரா காட்டிக்கொடுத்து விடும்.இந்த கேமராவை முதலில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களை அடுத்து வேலூர் மாவட்டத்தில் காலர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, வேலூர் தாலுகா, விரிஞ்சிபுரம், காட்பாடி, விருதம்பட்டு, குடியாத்தம் ஆகிய காவல்நிலையங்களுக்கு 18 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களுக்கும் காலர் கேமரா வழங்கப்பட்டு வருகிறது.இந்த கண்காணிப்பு கேமராக்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வந்துவிட்டால் போலீசாருக்கு ஏற்படும் பிரச்சனைகள் சற்று குறைந்து காணப்படும்.அதுமட்டுமின்றி காலர் கேமராவை பயன்படுத்திக்கொண்டு லஞ்சம் வாங்கினாலும் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் போலீசார் சற்று நேர்மையாகவே செயல்பட நேரிடும்.