பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் தமிழகம் மாவட்டங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நீலகிரி, போன்ற மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
01.09.2023 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னல் மின்னலுடன் கூடிய லேசான மலை முதல் மிதமான மழை வரை பெய்வதற்க்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழக மாவட்டங்களை பொறுத்தவரை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மற்றும் கள்ளக்குறிச்சி, மாவட்டங்கள் புதுச்சேரியிலும் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் 02.09.2023 அன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
03.09.2023 முதல் 05.09.2023 அன்று வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரே இடங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
02.09.2023 அன்று தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டி சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் தொடர்ந்து 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல் 03.09.2023 அன்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு நாட்களிலும் மீனவர்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இந்த செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.