சாலை கடைகளுக்கு எச்சரிக்கை.. இனி வீட்டிலிருந்தே கம்ப்ளைன்ட் செய்யலாம்!! அமலானது புதிய சட்டம்!!

0
223
Warning to road shops.. Now you can complain from home!! New law in effect!!

 

சாலை கடைகளுக்கு எச்சரிக்கை.. இனி வீட்டிலிருந்தே கம்ப்ளைன்ட் செய்யலாம்!! அமலானது புதிய சட்டம்!!

நமது இந்திய அரசானது மக்களாட்சி முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை,மேற்கொண்டு புதிய திட்டங்களை தீட்டி வருகிறது.அந்த வகையில் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பழைய குற்றவியல் திட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது,அதனை மாற்றும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பழைய குற்றவியல் சட்டங்களை நீக்கி புதிய குற்றவில் சட்டங்களை அறிமுப்படுத்தியத்தியுள்ளது.

அதில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC),குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC),இந்திய சாட்சியங்களின் சட்டம் என இந்த மூன்று சட்டங்களுக்கு மாற்றாக,பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் என்னும் மூன்று புதிய சட்டங்கள் இன்று அதாவது ஜூலை 1-ஆம் (01.7.2024)தேதி நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி இன்று டெல்லியில் பொது மக்களுக்கு இடையூராக கடை வைத்து இருந்த நபர் மீது முதல் வழக்கு பதியப்பட்டது.

மேலும் இனி ஆன்லைன் முறையில் மக்கள் புகார் தெரிவிக்கலாம்,நேரில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வர தேவையில்லை.பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .தற்போது அனைத்து வழக்குகளும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு ஒரு சில குறிப்பிட்ட,எல்லை வரை உள்ள காவல் நிலையங்களில் மட்டுமே புகார் தெரிவிக்க முடியும்,ஆனால் இப்பொழுது இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களில் இருந்தும் ஜீரோ FIR என்ற முறையில் ஆன்லைன் வாயிலாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யக் கூடிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. FIR பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் அது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.