டீ பிரியர்களுக்கு எச்சரிக்கை.. இந்த நேரத்தில் மட்டும் அதை அவாய்ட் பண்ணுங்கள்! இல்லையேல் உயிர் போய்விடும்!!
காலையில் எழுந்ததும் டீ குடிப்பது நம் மக்களிடம் காணப்படும் நீண்ட கால பழக்கமாகும்.டீ அல்லது காபி குடித்தால் தான் அந்நாளே நன்றாக இயங்கும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.சிலர் உணவிற்கு பதில் டீ குடித்து பசியை ஆற்றிக் கொள்கின்றனர்.
ஒரு சிலருக்கு தினமும் 3 அல்லது 4 டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்.இவ்வாறு டீ குடிப்பது என்பது நம் இரத்தத்தில் ஊறிப்போன ஒரு பழக்கமாக மாறிவிட்டது.ஆனால் இந்த பழக்கம் அளவாக இருந்தால் உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.ஒருவேளை அளவிற்கு மீறினால் அவை உயிருக்கு அப்பதான ஒன்றாக மாறிவிடும்.
உங்களில் பலர் காலை மற்றும் மாலை என இருவேளை டீ குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பீர்கள்.ஆனால் டீ குடிப்பதற்கு என்று ஒரு நேரம் காலம் இருக்கிறது.முதலில் காலையில் டீ குடிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பொழுது அவை வயிறு எரிச்சல்,அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.காரணம் உணவு உட்கொண்ட பிறகு டீ குடித்தால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.எனவே உணவு உட்கொள்வதற்கு முன்னர் மற்றும் பிறகு டீ குடிக்க விரும்பினால் அதை ஒரு மணி நேரம் கடந்த பின்னர் பருகலாம்.உங்களால் டீ குடிக்கும் பழக்கத்தை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றாலும் குறைந்த அளவு டீ குடிப்பது மிகவும் நல்லது.