Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெயிலில் சென்று வந்த பின் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?

Cold Water

#image_title

Cold Water: ஒரு சிலர் வெயிலில் சென்று வந்த பின்பு குளிர்ந்த தண்ணீர் குடிப்பார்கள். அதிலும் பலர் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை எப்போதும் பருகுவார்கள். இந்த கோடைக்காலத்தில் வெயிலால் புவியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் வெளியில் செல்லும் வேலை இருந்தாலும் அதனை காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்றியமைத்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு கோடைக்காலத்தின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்தநிலையில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் இந்த கோடைக்கால வெப்பத்ததை தாங்க முடியாமல் கேரளா போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்கிறார்கள். மற்றும் சிலர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே உடலுக்கு குளிர்ச்சியான ஜுஸ், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தயாரித்து எப்படியோ இந்த கோடை வெப்பத்தை கடக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு கருத்து சமூக வலைதளங்களிலும் அல்லது மற்றவர்கள் கூறியும் கேள்விப்பட்டிருப்போம். அது என்னவென்றால், வெயிலில் சென்று வந்த பிறகு குளிர்ந்த நீரை (about Cold Water in tamil) பருகினால் மாரடைப்பு அல்லது ஹூட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறந்துவிடுவார்கள் என்ற தகவலை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் வெயிலில் சென்று வந்த பின்பு குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடித்தால் மாரடைப்போ அல்லது ஹூட் ஸ்ட்ரோக் ஏற்படாது.

இதனால் பலரும் வெயிலில் சென்று வந்த உடனே குளிர்ந்த நீர் குடித்தால் இரத்த நாளங்கள் வெடித்து இறந்து விடுவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. மேலும் நாம் வெயிலில் சென்று வந்த உடன் ஐஸ் வாட்டர் (Cold Water information in tamil) குடித்தால் வயிற்றுள்ள இரத்த நாளங்கள் சுருங்கி தலைவலி அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.

Exit mobile version