Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாகும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.வீட்டில் இருக்கும் பொழுது எந்த நேரத்தில் தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவது சுலபம்.ஆனால் வெளியில் செல்லும் பொழுது எப்பொழுதும் வாட்டர் பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நம் வீட்டில் இருந்து தண்ணீர் நிரப்பி எடுத்துச் சென்று பருகினால் உடல் நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

வெளியில் உள்ள தண்ணீரில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.அப்படி இருக்கையில் நாம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியம்.

சிலர் வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் தண்ணீர் நிரப்பி பயன்படுத்துகின்றனர்.சுத்தம் செய்யாத வாட்டர் பாட்டிலில் லட்சக்கணக்கான கிருமித் தொற்றுகள் படிந்திருக்கிறது என்று நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்யாமல் தண்ணீர் ஊற்றி பருகினால் கொடிய பாக்டீரியாக்கள் உடலில் நேரடியாக நுழைந்துவிடும்.இதனால் வயிற்று வலி,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகும்.

சிலர் வாட்டர் பாட்டில் வாங்கியதில் இருந்து க்ளீன் செய்யாமல் பயன்படுத்துகின்றனர்.இது மிகவும் மோசமான பழக்கமாகும்.சிலர் வாட்டர் பாட்டிலில் நிரப்பிய நீரை பல நாட்கள் வரை பயன்படுத்துகின்றனர்.இப்படி பயன்படுத்தும் தண்ணீரில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள்,கிருமிகள் அதிகமாக உற்பத்தியாகி இருக்கும்.

அதேபோல் வாட்டர் பாட்டிலில் வாய் வைத்து குடிப்பதால் வாயில் உள்ள கிருமிகள் தண்ணீரில் கலந்து மற்றொருவர் பயன்படுத்தும் பொழுது அவை கிருமி தொற்றுக்கு வழிவகுக்கிறது.சிலர் கைகளை சுத்தம் செய்யாமல் வாட்டர் பாட்டிலை பிடிக்கின்றனர்.இதனால் கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் பாட்டில் மீது பரவுகிறது.இந்த கிருமிகள் தண்ணீரில் கலந்து கொடிய நோய் பாதிப்புகளை உருவாக்குகிறது.

வாட்டர் பாட்டிலை தினமும் சுத்தம் செய்த பிறகு தண்ணீர் ஊற்றி பயன்படுத்த வேண்டும்.சோப் பயன்படுத்தி வாட்டர் பாட்டிலை தேய்த்து கழுவிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் பாட்டிலை போட்டு சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு மீண்டும் கழுவிய பிறகு தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம்.இப்படி சுத்தம் செய்வதால் பாட்டிலில் உள்ள கிருமித் தொற்று முழுமையாக அழிந்துவிடும்.

தினமும் ஒருமுறை பாட்டிலை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு அலசிய பிறகு பயன்படுத்தினால் ஆபத்துக்கள் குறையும்.கைகளை கழுவிய பிறகு வாட்டர் பாட்டிலை பயன்படுத்த வேண்டும்.அதேபோல் எச்சில் படும்படி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

Exit mobile version