Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!! ரூ.1.65 கோடியை இழந்த மத்திய அரசு ஊழியர்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனின் வசம் மாறிக் கொண்டு வரும் சூழலில், youtube ஷார்ட்ஸ் என்பது தற்பொழுது மிகப்பெரிய பொழுது போக்காக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த youtube ஷார்ட்ஸ் மூலம் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் தன்னுடைய மொத்த பணமான 1.65 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

 

தான் ஏமாந்தது குறித்து இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பின், இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இதனை செய்த மோசடி கும்பலானது கம்போடியா நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. இதனால் காவல் துறையினர் அவர்களை இந்தியா வரவழைக்கும் நோக்கில் நூதனமாக நாடகமாடி அவர்களை இந்தியாவிற்குள் நுழைய வைத்து அதன் பின் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

இந்த மோசடியில் ஈடுபட்டவர்களான முகமது இஸ்மாயில், அபுதாஹிர், கேசவராஜ், கலில் அகமது ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று தகுந்த தண்டனை வாங்கி தருவதாகவும் மத்திய அரசு ஊழியரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

சைபர் கிரைம் போலீசார் பலமுறை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொழுதும், மக்கள் தங்களுடைய மொபைல் போனில் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலைகளின் மூலம் இந்த மோசடியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி மீண்டும் மீண்டும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்படுகின்றனர்.

Exit mobile version