சரும அழகை கெடுக்கும் மருக்கள்! இதை உதிர செய்யும் எளிய வழிகள் இதோ!!

0
131
Warts that spoil the beauty of the skin! Here are the easy ways to get rid of it!!

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை மருக்கள்.உடலில் கை,கால்,வயிறு,முதுகு,உள்ளங்கை,முகம்,மூக்கு,கழுத்து என்று அனைத்து இடங்களிலும் மருக்கள் தோன்றுகிறது.சிலருக்கு மச்சம் போன்ற மருக்கள் இருக்கும்.சிலருக்கு சிறிது சிறிதாக மருக்கள் இருக்கும்.

கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் இணைந்து சருமத்தில் மருக்களை உருவாக்குகிறது.மருக்களால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் அவை அழகை கெடுக்கும் என்பதால் இயற்கை பொருட்களை கொண்டு அதில் நீக்குவது நல்லது.

மருக்களை அகற்றும் இயற்கை வழிமுறைகள்:

1)இஞ்சி

ஒரு இஞ்சி துண்டை தோல் சீவிட்டு துருவிக் கொள்ளவும்.பிறகு இதை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.இதை மருக்கள் மீது பூசினால் அவை எளிதில் கொட்டிவிடும்.

2)பூண்டு

வெள்ளை பூண்டு பல் இரண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும்.மருக்கள் மீது இந்த பூண்டை அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் உதிர்ந்துவிடும்.

3)ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பவுலில் ஊற்றவும்.அதில் காட்டன் பஞ்சை நினைத்து மருக்கள் மீது தடவவும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் அனைத்தும் கொட்டிவிடும்.

4)உருளைக்கிழங்கு

ஒரு சிறிய உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.இதில் இருந்து சாறு எடுத்து மருக்கள் மீது அப்ளை செய்வதால் அவை சில தினங்களில் உதிரத் தொடங்கும்.

5)எலுமிச்சை

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு எடுக்கவும்.அதில் காட்டன் துணியை நினைத்து மருக்கள் மீது அப்ளை ஒத்தி எடுக்கவும்.இப்படி தொடர்ந்து செய்தால் மொத்த மருக்களும் உதிர்ந்துவிடும்.