Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசின் வெளியுறவு செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் ராணுவ பின்னணி கொண்டவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும் இவர் பேசும்போது புதிய இலங்கை அரசின் வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘முதலில் இந்தியா’ ஆகும். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம்.

அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் இதே கொள்கையை பின்பற்றுவார். கொழும்பு துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்துவோம் என்று அவர் கூறினார்.

Exit mobile version