Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துணை அதிபர் சென்ற கார் வெடி விபத்தா?

காபூலில் பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர வெடி விபத்தில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. துணை அதிபர் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
துணை அதிபரின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் துணை அதிபர் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
Exit mobile version