கவனிங்க.. இந்த ட்ரிக் தெரிந்தால் இனி பால் திரியாமல் கருப்பட்டி TEA போடலாம்!!

0
105
Watch out.. If you know this trick, you can put blackberry TEA without adding milk!!

நம் அனைவருக்கும் பிடித்த சுவையான பானம் தேநீர் தான்.பால்,காபியை விட தேநீருக்கு பலரும் அடிமையாக உள்ளனர்.தினமும் காலையில் ஒரு கப் சூடான டீ குடித்துவிட்டு அன்றைய நாளை தொடங்குபவர்கள் ஏராளம்.

ஆனால் நாம் குடிக்கும் தேநீர் ஆரோக்கியானதாக இருந்தால் இன்னும் நல்லது.பாலில் தேயிலை தூள்,சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் சுகர்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் தேநீர் செய்து பருகுங்கள்.

இதற்கு சிறந்த சாய்ஸ் கருப்பட்டி தேநீர் தான்.ஆனால் கருப்பட்டி சேர்த்தால் பால் திரிந்துவிடும் என்பதால் அதில் டீ செய்து குடிக்க பலரும் விரும்புவதில்லை.ஆனால் தற்பொழுது சொல்லப்படும் முறையை பின்பற்றினால் பால் திரியாமல் கருப்பட்டி தேநீர் தயாரிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)கருப்பட்டி – தேவைக்கேற்ப
3)இஞ்சி – ஒரு துண்டு
4)ஏலக்காய் – ஒன்று
5)டீத்தூள் – தேவையான அளவு
6)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு ஏலக்காயை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சி மற்றும் ஏலக்காயை சேருங்கள்.பிறகு தங்களுக்கு தேவையான அளவு டீத்தூள் மற்றும் கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வையுங்கள்.

இதனிடையே மற்றொரு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வையுங்கள்.இப்பொழுது கருப்பட்டி கலவை நன்கு கொதித்து வந்ததும் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.அடுத்து கொதிக்க வைத்த பாலை அதில் வடிகட்டி கலந்தால் சுவையான கருப்பட்டி தேநீர் தயார்.