Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!! 

Water breaks in schools - Kerala government's new initiative!!

Water breaks in schools - Kerala government's new initiative!!

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!!
 மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளையும் சந்நிதிக்கின்றனர்.
எனவே,  இந்தியாவில் முதல்முறையாக மாணவர்களுக்கு  தண்ணீர் இடைவேளை முறையை அறிமுகப்படுத்தியது கேரளா அரசு, நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான்.
இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் இரண்டு முறை மணி அடிக்கப்படும்  சமயத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பருவநிலை மாற்றம் காரணமாக அம்மாநிலத்தில் வரலாறு காணாத வெப்பநிலை அதிகரித்துள்ளது.
அதே போல் தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் பருகுவதின் அவசியத்தையும், தேவையின்றி வெளியில் வராமல் இருக்கவும் பொது மக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வுட்ட வேண்டும்.
Exit mobile version