Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒகேனக்கல்லுக்கு குறைந்த நீர் வரத்து!

தமிழகத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆறுகளில் காவிரி நதியும் ஒன்று கர்நாடக மாநிலம் குடகு மலை பகுதியில் உருவாகும் இந்த காவேரி ஆறு தமிழகத்தில் பல பகுதிகளில் தவழ்ந்து வருகிறது. இந்த காவிரி ஆற்றில் நீர் வந்தால் மட்டுமே தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை செய்யமுடியும் இப்படியான சூழ்நிலையில், காவிரியாற்றில் நீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு பல ஆண்டு காலமாக முரன் பிடித்து வந்தது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதன் அடிப்படையில், அந்த ஆணையத்தின் உத்தரவின்பேரில் கடந்த 2 ஆண்டு காலமாக காவிரி ஆற்றில் கர்நாடகத்திலிருந்து நீர் திறந்து விடப்படுவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது இதன்காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரண்டு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு நீர்வரத்து அதிகமாக வரத் தொடங்கியது.

இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகை தந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது.

அதன் அடிப்படையில், நேற்று மாலை 5 மணி நிலவரத்தின் அடிப்படையில், நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடி நீர் ஆகக்குறைந்தது, அதோடு மெயின் அறிவிக்கும் செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருப்பதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

Exit mobile version