பழுதான வீட்டு மாடியில் இருந்து வரும் மழைநீர் கசிவை சரி செய்ய தெர்மாகோல் போதும்!
நாம் வீடு கட்டி சில வருடங்களே ஆன போதிலும் திடீரென்று தரமற்ற சிமெண்டினால் மாடியில் வெடிப்பு ஏற்பட்டு மழை வரும் பொழுது நீர் கசிந்து வீட்டுக்குள்ளே வரும். அப்படி மழை நீர் கசிவு ஏற்படும் பொழுது பெரிய ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வரும் நீரை எப்படி சரி செய்யலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்போம்.
அதற்கு பெட்ரோல் இருந்தால் போதுமானது.
தேவையான பொருட்கள்:
1. தெர்மாகோல்
2. பெட்ரோல்
செய்முறை:
பெட்ரோல் மற்றும் தெர்மாகோல் வைத்து இரண்டு பொருள்களின் மூலம் உங்கள் வீட்டு மாடியில் காணப்படும் பிளவை சரி செய்து மழைநீர் கசிவையும் தடுக்கலாம்.
1. முதலில் உடைந்து அல்லது பிளந்து காணப்படும் பிளவுகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2. உள்ளே எந்த ஒரு தூசியும் இல்லாத அளவிற்கு நன்கு துடைப்பம் வைத்து சுத்தம் செய்யவும்.
3. உப்பு தகடு கொண்டு அனைத்து பக்கங்களிலும் நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
4. பின் மறுபடியும் எந்த ஒரு தூசும் இல்லாத அளவிற்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
5. இப்பொழுது ஒரு பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள்.
6. பாட்டிலின் மூடியில் துளையிட்டு பிளவு உள்ள பக்கங்களில் பெட்ரோலை சமமாக ஊற்றிக் கொள்ளவும்.
7. இப்பொழுது ஒரு பெரிய பவுல் அல்லது பிளாஸ்டிக் பாக்ஸை எடுத்துக் கொள்ளவும்.
8. அதில் பெட்ரோலை ஊற்றிக் கொள்ளவும்.
9. இப்பொழுது எவ்வளவு பிளவு இருக்கிறதோ அவ்வளவு பிளவுக்கு ஏற்றவாறு தெர்மோகோல்களை எடுத்துக் கொள்ளவும்.
10. அந்த தெர்மாகோல்களை பெட்ரோலில் முக்கி கொள்ளவும்.
11. பெட்ரோலில் தெர்மாகோள்கள் உருகி பசை பதத்திற்கு வந்து விடும்.
12. இப்பொழுது அந்த பசையை எடுத்து பிளவு உள்ள பகுதிகளில் பூசவும்.
13. அரை மணி நேரம் கழித்து அந்தப் பகுதியை பார்த்தால் குமிழ் போன்ற பபுள்ஸ் இருக்கும்.
14. அதனை ஒரு ஸ்கேல் வைத்து அதனை குத்தி விட்டுக் கொள்ளவும்.
15. பின் மறுபடியும் அந்த பசை நிரப்பிய பகுதியின் மேலே மறுபடியும் இரண்டாவது முறை பெட்ரோல் பசையை பூசவும்.
16. ஒரு நாள் அப்படியே வெயிலில் காயவைத்து அதை நீங்கள் பார்த்தால், உங்களுக்கே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த இடம் நீங்கள் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கசியாத அளவிற்கு நிற்கும்.
Water Leak Issue in House Solution in Tamil